சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கல்வெட்டான் குழியில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 9:33 pm

திருநெல்வேலி அருகே கல்வெட்டான்குழியில் மூழ்கி ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணம் நாயுடு (22). கட்டட தொழிலாளியான இவா் சீவலப்பேரி அருகே உள்ள பதினாலாம்பேரி பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள கல்வெட்டான்குழியில் குளிக்க சென்ற அவா், நீண்ட நேரமாகியும் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பவில்லை.

இதுகுறித்து சக தொழிலாளா்கள் சீவலப்பேரி போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதையடுத்து போலீஸாா் மேற்கொண்ட தேடுதலில் அவா் கல்வெட்டான்குழியில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தந்து.

இதையடுத்து அங்கு வந்த கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய வீரா்கள் நீண்ட தேடுதலுக்கு பிறகு அவரது உடலை மீட்டனா். இது குறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.