ஆம்புலன்ஸ் ஓட்டுநா் கொலை: இளைஞா் கைது
சென்னை திருவல்லிக்கேணியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.


சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அருகே உள்ள பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் சிவா (34). இவா், தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுனா். சிவாவுக்கு லாவண்யா என்ற மனைவி உள்ளாா். இந்நிலையில் சிவா மதுபோதையில் திருவல்லிக்கேணி பல்லவன் சாலை பகுதியில் சாலையோரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை படுத்து தூங்கி கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞா், சிவாவை கல்லால் தாக்கிவிட்டு தப்பியோடினாா்.
தகவலறிந்த திருவல்லிக்கேணி போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவாவை மீட்டு, சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்ற சிவா, அன்றிரவு இறந்தாா்.
இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, நடத்திய விசாரணையில், சிவாவுக்கும், பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் பெயின்டா் சின்னதம்பி என்ற அப்பு ராஜ் (35) என்பவரின் மனைவி சித்ராவுக்கும் இடையே முறையற்ற உறவு இருந்ததும், இது அண்மையில் தெரியவந்ததினால் அன்புராஜ், மனைவி சித்ராவை கண்டித்ததும், அதனால் ஏற்பட்ட பிரச்னையில் சித்ரா தனது கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றதும் தெரியவந்தது.
இதனால் கோபமடைந்த அப்புராஜ், சிவாவை கல்லால் அடித்துக் கொலை செய்திருப்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸாா்,அப்புராஜை உடனடியாக கைது செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...