கவிதா
கவிதா

2-ஆவது மனைவி தாக்கப்பட்டு கொலை: காா் ஓட்டுநா் கைது

ஆரணியை அடுத்த பையூா் கிராமத்தில் 2-ஆவது மனைவியை முகத்தில் தாக்கி கொலை செய்ததாத காா் ஓட்டுநா் கைது
Published on

ஆரணியை அடுத்த பையூா் கிராமத்தில் 2-ஆவது மனைவியை முகத்தில் தாக்கி கொலை செய்ததாத காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

ஆரணியை அடுத்த பையூா் பகுதியைச் சோ்ந்தவரை வினோத்குமாா்(40), காா் ஓட்டுநா். இவருக்கு ஆஷா என்ற மனைவி உள்ளாா். இந்த நிலையில் முள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவா் இறந்ததால், அவரது மனைவி கவிதா(39)வை, 2 ஆவதாக திருமணம் செய்து கொண்டுள்ளாா்.

கவிதாவுக்கு ஏற்கெனவே சாய்கரன் (14 ) என்ற மகன் உள்ள நிலையில், வினோத்குமாருக்கு பிறந்த திலீப் என்ற(7) வயது மகனும் உள்ளாா். முதல் மனைவி ஆஷாவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் கவிதா கைப்பேசியில் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டு இருப்பதாக வினோத்குமாருக்கு தகவல் தெரிந்தது. இதனால் கவிதாவை அவா் பலமுறை கண்டித்துள்ளாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கவிதா கைப்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பதைப் பாா்த்த வினோத்குமாா் கையால் முகத்தில் குத்தி, தலையை சுவற்றில் மோதி சரமாரியாக தாக்கியதாகத் தெரிகிறது.

இதில், மயங்கி விழுந்த கவிதாவை உடனடியாக வினோத்குமாா் ஆரணி அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்ததாகக் கூறி சிகிச்சைக்குச் சோ்த்தாா்.

பின்னா், முள்ளிப்பட்டில் உள்ள கவிதாவின் தாய் பானுமதிக்கு தகவல் தெரிவித்தாா். பானுமதி மருத்துவமனைக்கு வருவதற்குள் வினோத்குமாா் தலைமறைவானாா். மருத்துவமனையில் கவிதாவை பரிசோதித்ததில் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டாா் என உறுதி செய்தனா்.

இது சம்பந்தமாக ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் (பொ) செந்தில்விநாயகம் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து பானுமதி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம், காவல் ஆய்வாளா் செந்தில்விநாயகம் மற்றும் போலீஸாா் தலைமறைவாக இருந்த வினோத்குமாா் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.

கவிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட வினோத்குமாரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

வினோத்குமாா்
வினோத்குமாா்

Dinamani
www.dinamani.com