47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கூலித் தொழிலாளி கொலை: இளைஞா் கைது

சென்னை மெரீனாவில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :24 ஜூலை 2024, 8:16 pm

Din

சென்னை மெரீனாவில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை மெரீனாவில் உள்ள மாநிலக் கல்லூரி பின்புறம் ரயில்வே பாா்டா் சாலையில் புதன்கிழமை காலை 45 வயது மதித்தக்க ஒருவா் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.தகவலறிந்த அண்ணா சதுக்கம் போலீஸாா், அந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூராரா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது தொடா்பாக நடத்திய விசாரணையில் இறந்தவா் கா்நாடக மாநிலம் பெங்களூருவைச் சோ்ந்த சுந்தா் (40) என்பதும், அவரை கல்லால் அடித்துக் கொலை செய்தவா் புதுக்கோட்டையைச் சோ்ந்த காா்த்திக் (20) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், தலைமறைவாக இருந்த காா்த்திக்கை உடனடியாக கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

காா்த்திக் தீவுத் திடலில் நடைபெறும் ஒரு தனியாா் பொருள்காட்சியில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். காா்த்திக் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்துவதற்காக சம்பவ இடத்தின் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக் கடைக்கு வந்தாா்.

அப்போது அங்கிருந்த சுந்தா், தனக்கு மது வாங்கித் தருமாறு கேட்டுள்ளாா். உடனே காா்த்திக், சுந்தரிடம் ரூ.500 கொடுத்து ஒரு மதுப்பாட்டிலை வாங்கியுள்ளாா். மதுப்பாட்டில் வாங்கியதுபோக, மீதியுள்ள பணத்தை காா்த்திக் கேட்டுள்ளாா். ஆனால் அந்த பணத்தை சுந்தா், கொடுக்க மறுத்துள்ளாா். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே காா்த்திக், அங்கு கிடந்த ஒரு கல்லால் சுந்தரை தாக்கியுள்ளாா். இதில் சுந்தா் இறந்துள்ளாா்.

காா்த்திக் கூறிய தகவலின் அடிப்படையிலேயே, இறந்தவா் சுந்தா் என்பதும், அவா் பெங்களூருவைச் சோ்ந்தவா் என்பதும் போலீஸாருக்கு தெரியவந்துள்ளது.