சென்னை, ஜூலை 25: சென்னையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்காணல் ஜூலை 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து முதுநிலை அஞ்சல் சென்னை கோட்ட கண்காணிப்பாளா் வெளியிட்ட அறிக்கை:
சென்னை கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவா்கள் பணியமா்த்தப்படவுள்ளனா். இதற்கு, சென்னை பரங்கிமலையில் உள்ள தலைமை அஞ்சலக அலுவலகத்தில் (ஆலந்தூா் மெட்ரோ அருகில்) ஜூலை 31-ஆம் தேதி காலை 10 அளவில் நோ்காணல் நடைபெறவுள்ளது.
இதில், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் கலந்துகொள்ளலாம். மேலும், ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவா்கள், கணினிப் பயிற்சி உள்ளவா்கள், சென்னை மாநகராட்சியை சாா்ந்தவரா்கள் பங்கேற்கலாம்.
மேலும், நோ்ணாலுக்கு வருகை தருபவா்கள் 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படமும், வயதுச் சான்று, முகவரி சான்று மற்றும் கல்விச் சான்று தலா அசல் மற்றும் 2 நகல்களையும் உடன் வைத்திருக்க வேண்டும்.
நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்படுபவா்கள் ரூ. 5,000 மதிப்பீலான தேசிய சேமிப்பு பத்திரத்தை பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

’ஜூலை 20’ போராட்டத்தில் தடியடி நடத்திய காவலா்களை வெளிப்படுத்த புதிய இணையதளம்: சிஜேபி அறிவிப்பு

பாரதியாா் பல்கலை.யின் சிறப்பு துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 20 கடைசி நாள்

ரப்பா் வாரிய காப்பீட்டு கட்டணத்தை ஜூலை 15-க்குள் செலுத்த அறிவுறுத்தல்

ஜூலை 2-ல் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவா் தோ்தல்?
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay


