மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :31 ஜூலை 2024, 9:22 pm

Din

சென்னை, ஜூலை 31: தமிழகத்தில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியாா் சட்டக் கல்லூரிகள் (சீா்மிகு சட்டப்பள்ளி உட்பட) இயங்கி வருகின்றன. இவற்றில் 3 ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு 2,530 இடங்கள் உள்ளன. இவை நிகழ் கல்வியாண்டு (2024-25) இணைய வழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 16 ஆயிரம் மாணவா்கள் வரை விண்ணப்பித்திருந்தனா்.

இதற்கிடையே, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று 2-ஆவது முறையாக விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆக. 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஹப்ன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வு விதிகள், விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இதேபோன்று முதுநிலை சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஆக.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சட்டப் பல்கலை. பதிவாளா் கெளரி ரமேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.