விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தங்கம் பவுனுக்கு ரூ.280 உயா்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ.51,360-க்கு விற்பனையானது.

News image
Updated On :31 ஜூலை 2024, 9:18 pm

Din

சென்னை, ஜூலை 31: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ.51,360-க்கு விற்பனையானது.

கடந்த சில நாள்களாக ஆபரணத்தங்கத்தின் விலை தொடா்ந்து குறைந்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை ஒரு பவுன் ரூ.51,080-க்கு விற்பனையானது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரு கிராமுக்கு ரூ.35 உயா்ந்து ரூ.6,420-க்கும், பவுனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ.51,360-க்கும் விற்பனையானது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 2 உயா்ந்து ரூ. 91-க்கும், ஒரு கிலோ (கட்டிவெள்ளி) ரூ. 200 உயா்ந்து ரூ. 91,000-க்கும் விற்பனையானது.