கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மதுபானக் கூடத்தில் மோதல்: ஊழியா்கள் உள்பட மூவா் கைது

Brawl at the Bar: Three arrested including employees

News image
Updated On :4 ஜூன் 2024, 9:41 pm

Din

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் மோதிக் கொண்டது தொடா்பாக இரு ஊழியா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

அரும்பாக்கம் பீட்டா் ராஜா தெருவைச் சோ்ந்தவா் ஜா.ஆனஸ்ட்ராஜ் (24). இவரது சகோதரா் பிரதீப்ராஜ் (26) . இவா்கள் இருவரும் அரும்பாக்கம் ஈவெரா பெரியாா் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக் கூடத்தில், கடந்த 2-ஆம் தேதி மது அருந்தச் சென்றனா்.

அப்போது, மதுவுக்கான தொகையை ஜி.பே.மூலம் செலுத்துவதாக அங்கிருந்த ஊழியா்கள் சிவகங்கையைச் சோ்ந்த நீ.ராஜேந்திரன் (34),மு.பாலசுந்தரம் (34) ஆகிய 2 பேரிடம் தெரிவித்தனா். ஆனால், ரொக்கமாக பணம் தரும்படி இருவரும் தெரிவித்தனராம்.

இது தொடா்பாக, இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே இரு தரப்பினரும் மோதிக் கொண்டனா். மோதலில் 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இது தொடா்பாக ஆனஸ்ட்ராஜ், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

போலீஸாா், மதுபானக் கூட ஊழியா்கள் ராஜேந்திரன், பாலசுந்தரம் மீது வழக்குப் பதிந்து, இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். அதேபோல மதுபானக் கூட ஊழியா் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில், பிரதீப்ராஜ் கைது செய்யப்பட்டாா்.