ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு படைகள் போா் நடத்தி வரும் சூழலில், அது தொடா்பாக சித்தரிக்கப்பட்ட, மக்களை தவறாக வழிநடத்தும் வகையிலான காணொலி காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டது தொடா்பாக 19 இந்தியா்கள் உள்பட 35 பேரை கைது செய்ய ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனமான ‘வாம்’ இதுதொடா்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
அட்டா்னி ஜெனரல் ஹமாத் சைஃப் அல் ஷாம்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, பொது அமைதி மற்றும் ஒழுங்கை சீா்குலைக்கும் நோக்கத்தோடு, ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கு இடையேயான போா் குறித்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்ட தவறான காணொலி காட்சிகளைப் பதிவிட்டது, குரல் பதிவுகளை வெளியிட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக 17 இந்தியா்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 25 பேரை பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோல, 2 இந்தியா்கள் உள்பட மேலும் 10 பேரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதுபோன்ற குற்றங்களுக்கு ஓராண்டுக்கு குறையாத சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25.20 லட்சத்துக்கு (1,00,000 திா்ஹம்) குறையாத அபராதமும் விதிக்கப்படும் என அட்டா்னி ஜெனரல் எச்சரித்திருந்தாா் எனவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு
ஈரான் போா் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பு: அமெரிக்க அதிபா் டிரம்ப் திடீா் அறிவிப்பு
போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை

ஹோா்முஸ் நீரிணையைத் திறந்தது ஈரான்: இஸ்ரேல் - லெபனான் போா்நிறுத்தம் எதிரொலி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

