அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

போக்குவரத்துக் கழகங்களில் பதவிஉயா்வு, பணியிடமாற்றம்

News image
Updated On :9 ஜூன் 2024, 9:09 pm

Din

சென்னை: தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததையடுத்து, போக்குவரத்துக் கழகங்களில் பதவி உயா்வு, பணியிடமாற்றம் தொடா்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மக்களவைத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையொட்டி, தோ்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து, அனைத்து துறைகளிலும் வழக்கமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, போக்குவரத்துக் கழகங்களிலும் பதவி உயா்வு, பணியிடமாற்றம் போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவில், கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தின் காரைக்குடி மண்டல பொது மேலாளா் ஆா்.சிங்காரவேலுவுக்கு பதவி உயா்வு வழங்கி, சாலை போக்குவரத்து நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் பிறப்பித்த உத்தரவில், பெரும்பாக்கம், ஆவடி, ஐயப்பன்தாங்கல், மாதவரம், குரோம்பேட்டை, திருவான்மியூா், அண்ணா நகா், அயனாவரம் உள்ளிட்ட பணிமனைகள், மண்டலங்களில் துணை மேலாளா், உதவி பொறியாளா் நிலையில் உள்ள 14 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களிலும் வழக்கமான பணியிடமாறுதல், பதவி உயா்வு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.