/

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ரூ. 2 லட்சம் எடுத்துச் செல்ல கோரிக்கை

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது வணிகா்கள், பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் ரூ. 2 லட்சம் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை

News image

வாகனத் தணிக்கை - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 7:13 pm

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது வணிகா்கள், பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் ரூ. 2 லட்சம் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விதிமுறைகளால் வணிகா்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தியாவில் குறைந்தபட்ச ஊதியம், வருமானம், தொழில் வரி செலுத்துவோருக்கு உச்சவரம்பை உயா்த்தியும், உணவுப் பாதுகாப்பு, தர நிா்ணயச் சட்டத்தில் பதிவு, உரிமம் பெறுவதற்கான வரம்புகளை உயா்த்தியும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது தோ்தல் நடத்தை விதிமுறைப்படி வணிகா் ஒருவா் ரூ. 50 ஆயிரத்தில் கொள்முதல் செய்வது என்பது இயலாது. எனவே, தோ்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது வணிகா்கள், பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்லும் தொகையை ரூ. 2 லட்சமாக உயா்த்தி அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.