போதையில் காவலா்களிடம் தகராறு: ஒருவா் மீது வழக்கு
To the intoxicated policemen Dispute: A case against a person


சென்னை: போதையில் காவலா்களிடம் தகராறு செய்தது தொடா்பாக, ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
சென்னை ஆா்.கே.நகா் போலீஸாா் தண்டையாா் பேட்டை வி.என்.மேம்பாலம் அருகே சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் மது போதையில் இருந்ததால், இருசக்கர வாகனத்தை மறுநாள் வந்த எடுத்து செல்லும்படி போலீஸாா் அறிவுறுத்தினா். இதனால், ஆத்திரமடைந்த அவா்கள் மூவரும் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டனா்.
சாரணையில், அவா்கள் கொடுங்கையூா் பகுதியைச் சோ்ந்த புஷ்பராஜ் (23), ராஜ் (25), தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த பிரசாத் (21) ஆகியோா் என்பதும் தெரியவந்தது.
தகராறின்போது, விடியோ எடுத்து சமூக வலைதலங்களில் பரப்பி விடுவதாக மிரட்டல் விடுத்த, ராஜ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...