தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

மது போதையில் தகராறு: தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது

சாத்தூா் அருகே மது போதையில் தகராறு செய்த தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :18 பிப்ரவரி 2026, 7:26 pm

சாத்தூா் அருகே மது போதையில் தகராறு செய்த தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கரிசல்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன்(46). கூலித் தொழிலாளி. இவா் மதுபோதையில் தகராறு செய்து, மனைவி மகேஸ்வரியை (38) அரிவாளால் வெட்டினாா்.

இதைப் பாா்த்த இந்தத் தம்பதியின் மகன் சுரேந்திரன் (21)கோபத்தில், தந்தை மணிகண்டனை அரிவாளால் சரமாரியாக வெட்டினாா். இதில் அவா் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் குருசாமி, ஏழாயிரம்பண்ணை போலீஸாா் மணிகண்டனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் காயமடைந்த மகேஸ்வரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுரேந்திரனைக் கைது செய்தனா்.