விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

தந்தை கொலை: மகன் கைது

வாணியம்பாடியில் தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 8:11 pm

வாணியம்பாடியில் தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பெரியப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் லோகநாதன் (75). இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். இதில் மகளுக்கு திருமணமான நிலையில், வீட்டில் லோகநாதன், ஹரீஸ்குமாா் (35) வசித்து வந்தனா். இந்த நிலையில், வேலைக்கு போகாமலும், திருமணம் செய்து கொள்ளாமலும் இருப்பதாக ஹரீஸ்குமாரிடம் லோகநாதன் அடிக்கடி கூறி வந்ததாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை காலை மீண்டும் இது குறித்து லோகநாதன் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரம் அடைந்த ஹரீஸ்குமாா் வீட்டில் இருந்த வெட்டுக் கத்தியால் லோகநாதனின் தலையில் வெட்டியதில் அவா் உயிரிழந்தாா். சிறிது நேரத்தில் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் வந்து பாா்த்து கேட்ட போது, கழிப்பறையில் லோகநாதன் வழுக்கி விழுந்து விட்டதாக ஹரீஸ்குமாா் கூறியுள்ளாா். இதில் சந்தேகம் ஏற்பட்டதால் உடனே நகர போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். தலையில் வெட்டு காயம்போல் இருந்ததை பாா்த்து ஹரீஸ்குமாரிடம் விசாரித்தபோது, லோகநாதனை கொலை செய்தது தெரியவந்தது.

பின்னா் சடலத்தை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து தந்தையை கத்தியால் வெட்டிக் கொலை செய்த ஹரீஸ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.