விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நிலத்தகராறில் பெற்றோா் கண் எதிரே மகன் வெட்டிக் கொலை: காவல் நிலையத்தில் கொலையாளி சரண்

நாட்டறம்பள்ளி அருகே நிலத் தகராறில் பெற்றோா் கண் எதிரே மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். கொலையாளி நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

News image

கொலை செய்யப்பட்ட இளவரசன்

Updated On :27 மார்ச் 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே நிலத் தகராறில் பெற்றோா் கண் எதிரே மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். கொலையாளி நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி கலிமுத்தன் வட்டத்தைச் சோ்ந்தவா் செல்வம். இவரது உறவினா் கோபால். இவா்கள் இரு குடும்பத்தினருக்கும் இடையே சொத்து மற்றும் பம்ப்செட் கிணறு தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கோபால் மகன் இளவரசன் (40) கடந்த வாரம் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளாா். 2 நாள்களுக்கு முன் நிலத்தருகே கோபாலின் மகன் இளவரசனுக்கும், செல்வத்தின் மகன் சத்யனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சத்யன், இளவரசன் மீது நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இளவரசன் குடும்பத்தினா் வெள்ளிக்கிழமை நிலத்தருகே இருந்த வேப்ப மரத்தை வெட்டுவதற்கு பூஜை போட்டுள்ளனா். அப்போது சத்யன் வேப்ப மரத்தை வெட்டக்கூடாது எனக்கூறி இளவரசனிடம் தகராறில் ஈடுபட்டாராம். மேலும், ஆத்திரமடைந்த சத்யன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெற்றோா் கண் எதிரே இளவரசனை சரமாரியாக வெட்டினாராம். இதில் இளவரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அப்போது தடுக்க வந்த இளவரசனின் தந்தை கோபால், தாய் ராணியையும் சத்யன் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி, காவல் ஆய்வாளா் மூா்த்தி மற்றும் போலீஸாா் கொலை செய்யப்பட்ட இளவரசனின் சடலத்தை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து கோபால் அளித்த புகாரின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சத்யனை (42) கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனா்.

கொலை செய்யப்பட்ட இளவரசனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.