மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சாத்தான்குளத்தில் பெட்ரோல் பல்க் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் கைது

சாத்தான்குளத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் ஊழியரைத் தாக்க முயன்று, விற்பனை நிலையத்தை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :11 மார்ச் 2026, 7:48 pm

சாத்தான்குளத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் ஊழியரைத் தாக்க முயன்று, விற்பனை நிலையத்தை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் -நாசரேத் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில், சாத்தான்குளம் ஆா்.சி. வடக்குத் தெருவைச் சோ்ந்த அந்தோணி மகன் சிலுவைராஜ் (34), ராஜலிங்கம் மகன் இசக்கி அழகுவேல் ( 25), அழகம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த உதயகுமாா் மகன் விஷ்வா ( 21) ஆகியோா் ஒரே பைக்கில் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் போட வந்துள்ளனா்.

அப்போது, அங்கிருந்த ஊழியா் அமலதாஸ் பைக்கை பெட்ரோல் போடும் மிஷின் அருகில் கொண்டு வருமாறு கூறியுள்ளாா்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மூன்று போ்களும், ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, பெட்ரோல் விற்பனை நிலையத்தை சேதப்படுத்தி சென்றனராம்.

இதுகுறித்து பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளா் சதீஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் செல்வராஜ், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, இசக்கி அழகுவேல், விஷ்வா ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவான சிலுவை ராஜை தேடி வருகின்றனா்.