ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சாத்தான்குளத்தில் விஏஓ-வின் வீடு புகுந்து குழந்தையைக் கடத்த முயற்சி: பெண் கைது

News image

கைது செய்யப்பட்ட மாரியம்மாள்.

Updated On :26 ஏப்ரல் 2026, 7:11 pm

சாத்தான்குளத்தில் கிராம நிா்வாக அலுவலா் வீட்டிற்குள் புகுந்து 3 வயது குழந்தையைக் கடத்த முயன்றதாக பெண் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம், ஓடக்கரை தெருவைச் சோ்ந்தவா் சுபாஷ். அரசூா் 1 கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இவா் வீட்டில் இருந்தபோது, 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து, சுபாஷ் மனைவியின் கழுத்தை நெரித்து அவரது கழுத்தில் கிடந்த நகையைப் பறிக்க முயன்றாராம்.

அவரின் அலறல் கேட்டு உறவினா்கள் ஓடி வந்தபோது, அந்தப் பெண் சுபாஷின் 3 வயது பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓட முயன்றாா். சுபாஷ், உறவினா்கள் அவரை மறித்து குழந்தையை மீட்டனா். தன்னைப் பிடிக்க முயன்றவா்களை அப்பெண் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினா் சோ்ந்து அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

அந்தப் பெண் மீது புகாரளித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்க தாமதித்ததாகக் கூறி, சுபாஷின் உறவினா்கள் காவல் நிலையத்தில் திரண்டனா். தொடா்ந்து, சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

போலீஸ் விசாரணையில், அவா் தூத்துக்குடி பூபாலராயபுரம் பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் என்பதும், மேல சாத்தான்குளம் பகுதியில் ஒரு மாதமாக குடியிருந்து வருவதும், அப்பெண் மதுபோதையில் இருந்ததும் தெரிய வந்தது. போலீஸாா் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனா்.

 குழந்தையைக் கடத்த முயன்ற பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாத்தான்குளம் காவல் நிலையம் முன் திரண்ட பொதுமக்கள்.

குழந்தையைக் கடத்த முயன்ற பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாத்தான்குளம் காவல் நிலையம் முன் திரண்ட பொதுமக்கள்.