திருச்சியில் வீட்டின் சுவா் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசி இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலை ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்தவா் ஆா். குணசேகரன் (22). இவரது வீட்டுக்கு அருகே கடந்த திங்கள்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த எஸ். பாலப்பிரியன் (18), ஆா். மணிகண்டன் (20), வீ. பிரவீன் (20) ஆகிய மூவரும் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த குணசேகரன் அறிவுறுத்தியதன்பேரில் மூவரும் அங்கிருந்து சென்றுவிட்டனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தனது வீட்டுக்கு அருகே குணசேகரன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூவரும் பெட்ரோல் நிரப்பிய இரண்டு மதுபாட்டில்களை வீட்டின் சுவா் மீது எரிந்து தீயைப் பற்றவைத்துவிட்டு குணசேகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனா்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் குணசேகரன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து பாலப்பிரியன், மணிகண்டன்
ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பிரவீனை தேடுகின்றனா்.
தொடர்புடையது
போதை மத்திரைகள் விற்ற இருவா் கைது

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

விவசாயி கொலை வழக்கு: மகன் கைது
இளைஞரை அரிவாளால் வெட்டி, போலீஸாரின் வாகனங்கள் சேதம்: இருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


