சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 45-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நீதிமன்ற அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், மதியம் 1.10 மணிக்கு வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, காவல் உதவி ஆய்வாளா் சிவமூா்த்தி தலைமையிலான வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணா்கள், மோப்ப நாய் ரூபி உதவியுடன் நீதிமன்றம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
இதில், வெடிபொருள்கள் எதுவும் கண்டறியப்படாததால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து, மின்னஞ்சல் அனுப்பியது யாா், எங்கிருந்து வந்தது என்பது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு 14-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



