உதகையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள தனியாா் விடுதிகள், தனியாா் பள்ளிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மா்ம நபா்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், உதகை விசி காலனி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மோப்ப நாய் உடன் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனா்.
ஆனால், வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படவில்லை. அப்போதுதான் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மின்னஞ்சல் மூலம் 3 ஆண்டுகளாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மென்பொறியாளா் கைது!

வேலூா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை

நாகா்கோவில் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

மேகதாது விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம்: அமைச்சர் நிர்மல் குமார்



