ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:15 am IST

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை மின்னஞ்சலில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் அதிகாரபூா்வ மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை நண்பகல் 12 மணியளவில் ஒரு மின்னஞ்சல் வந்தது.

அதில், திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை சற்று நேரத்தில் வெடிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நீதிமன்ற அலுவலா்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு போலீஸாா் மற்றும் மாநகர போலீஸாா், இரண்டு குழுக்களாக மெட்டல் டிடெக்டா் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனையிட்டனா்.

அதில் வெடி பொருள்கள் கைப்பற்றப்படவில்லை. மின்னஞ்சலில் வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரி குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.