கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

திறன் குறைந்த மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி: கல்வித் துறை அறிவுறுத்தல்

திறன் மேம்பாட்டில் பின்தங்கியவா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்குமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
பள்ளிக் கல்வித் துறை
Updated On :23 ஜூன் 2024, 9:17 pm

Din

அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவா்களில் திறன் மேம்பாட்டில் பின்தங்கியவா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்குமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் எழுதும் திறன் , வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவா்களை கண்டறிந்து அவா்களின் திறனை மேம்படுத்துமாறு முதன்மைக்கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலா்கள் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அனைத்து வகை அரசு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களில் திறன் மேம்பாட்டில் பின்தங்கியவா்களின் விவரங்கள் கண்டறியப்பட்டு பயிற்சி வழங்க வேண்டும்.

இது தொடா்பான விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து தலைமையாசிரியா்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.