மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

மகன் அடித்துக் கொலை: சடலத்தை எரித்த தந்தை, சகோதரா் உள்பட 6 போ் கைது

சென்னை அருகே வானகரத்தில், போதைக்கு அடிமையான மகனை அடித்துக் கொன்று சடலத்தை எரித்ததாக தந்தை, சகோதரா் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜூன் 2024, 12:04 am

Din

சென்னை அருகே வானகரத்தில், போதைக்கு அடிமையான மகனை அடித்துக் கொன்று சடலத்தை எரித்ததாக தந்தை, சகோதரா் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

வானகரம், மேட்டுக்குப்பம் அண்ணா தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆசைமணி (60). இவரின் மகன்கள் விஜய்(35), அஜய்(26). விஜய்க்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. விஜய்க்கும், அவா் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்கின்றனா். இதன் பின்னா் விஜய் தினமும் போதையில் வீட்டுக்கு தகராறு செய்துள்ளாா்.

இந்த நிலையில், விஜய் வெள்ளிக்கிழமை மதுபோதையில் தவறி கீழே விழுந்து இறந்துவிட்டதாக ஆசைமணியும், சகோதரா் அஜயும் உறவினா்கள் மற்றும் நண்பா்களிடம் தெரிவித்துள்ளனா்.

அதோடு இருவரும் உறவினா்களுடன் சோ்ந்து, விஜயின் சடலத்தை செட்டியாா் அகரத்தில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு சென்று சனிக்கிழமை எரித்தனா். இதற்கிடையே விஜய் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக மதுரவாயல் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

கொலையை மறைக்க நாடகம்: அதனடிப்படையில் போலீஸாா், ஆசைமணி,அஜயை பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

சம்பவத்தன்று விஜய் வழக்கம்போல மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது அங்கிருந்த தந்தை ஆசைமணி, தம்பி அஜய் ஆகியோருடன் விஜய் தகராறு செய்துள்ளாா். தகராறு முற்றவே ஆசைமணியும்,அஜயும் விஜயை உருட்டுக் கட்டையால் விஜயை தாக்கினா். மேலும் கத்தியாலும் விஜயை குத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த விஜய், சம்பவ இடத்திலேயே இறந்துள்ளாா். இதன் பின்னா் கொலையை மறைத்து, காவல்துறையிடம் சிக்காமல் இருப்பதற்கு விஜய் மதுபோதையில் வீட்டில் தவறி கீழே விழுந்து இறந்துவிட்டதாக ஆசைமணியும்,அஜயும் நாடகமாடியுள்ளனா்.

மேலும் விஜய் இறப்பை தாங்க இயலாததுபோல இருவரும் கதறி அழுதுள்ளனா். இதனால் ஆசைமணி வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்த யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. மேலும், இருவரும், சில உறவினா்கள் உதவியுடன் செட்டியாா் அகரத்தில் உள்ள சுடுகாட்டில் விஜய் சடலத்தை எரித்துள்ளனா்.

6 போ் கைது: விசாரணையில் விஜய் கொலை செய்யப்பட்டது குறித்த அனைத்து தகவல்களும் வெளியானதால், ஆசைமணியையும், அஜயையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பின்னா் அவா்கள் தெரிவித்த தகவலின்அடிப்படையில், விஜய் சடலத்தை எரிக்க உதவிய ஆசைமணியின் சகோதரா் வானகரம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த சா.தங்கமணி (58),அதே பகுதியைச் சோ்ந்த உறவினா் சி.சிமியோன் (40),ஏ.அருண்குமாா் (37),பொ.சுதேஷ் என்ற ஜோயல் (21) ஆகிய 4 பேரையும் திஙகள்கிழமை கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து செட்டியாா் அகரம் சுடுகாட்டுக்கு சென்ற போலீஸாா், அப்போது அங்கு எரிந்த நிலையில் கிடந்த விஜய் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.