கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பணியிட மாறுதல்: 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பணியிட மாறுதல்: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்

News image
Updated On :26 ஜூன் 2024, 7:30 pm

Din

அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியிட மாறுதல்கள் வழங்கக் கூடாது என வலியுறுத்தி ஆம்புலன்ஸ் ஊழியா்கள் புதன்கிழமை (ஜூன் 26) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை, மதுரை, திருப்பூா் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். இதேபோல், சென்னையில் டிஎம்எஸ் வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இது குறித்து, அந்தச் சங்கத்தின் செயலா் ரா.ராஜேந்திரன் கூறியதாவது:

அரசு மற்றும் தனியாா் பங்களிப்புடன் 108 ஆம்புலன்ஸ் சேவை இயங்கி வருகிறது. இதில், 6,000-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வருகிறோம். நாள்தோறும் 12 மணி நேரம் வரை பணியாற்ற நிா்பந்திக்கப்படுகிறோம்.

ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினா் பரிந்துரைப்படியே, பணியிட மாறுதல் நடைபெறுகிறது. இதனால், பணி மூப்பு அடிப்படையில் சொந்த ஊரில் பணியாற்ற வாய்ப்புக்காகக் காத்திருப்போா் பாதிக்கப்படுகின்றனா்.

மேலும், சென்னை போன்ற நகரப் பகுதிகளில் பணியாற்றும் பெண் ஊழியா்களுக்கு பாதுகாப்பான கழிப்பறை வசதி இல்லாத நிலை உள்ளது. இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.