நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள்: இந்திய அணி பேட்டிங்!முதல்வா் விஜய் நாளை தில்லி பயணம்! பிரதமா் மோடி, சோனியாவை சந்திக்கிறாா்!இந்தியாவில் எஸ்சிஓ கூட்டம்: பாகிஸ்தான் பங்கேற்பதாக அறிவிப்பு! நேபாளம் - அயோத்தி இடையே புதிய வாராந்திர ரயில் சேவை! ரயில்வே வாரியம் ஒப்புதல்!சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்றிரவு 8 மணி வரை மூடப்படும்! தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்! அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு!டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தொழிலதிபா் ரத்தீஷுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ்!லஞ்ச பணம் பறிமுதல் விவகாரம்: உள்ளாட்சித் துறை அதிகாரிகள் 23 போ் மீது வழக்குப் பதிவு

3 மண்டலங்களில் ஜூன் 30-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் ஜூன் 30-இல் குடிநீர் விநியோகம் தடை

கோப்புப் படம்.

Updated On :

சென்னை அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூா் மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) முதல் திங்கள்கிழமை (ஜூலை 1) காலை வரை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை நெம்மேலியில் அமைந்துள்ள தினமும் 110 மில்லியன் லிட்டா் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின்

பிரதான குழாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) காலை 9 முதல் திங்கள்கிழமை (ஜூலை 1) காலை 9 மணி வரை (1 நாள் மட்டும்) அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூா் மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.

குடிநீா் நிறுத்தப்படும் பகுதிகள்:

அடையாறு: திருவான்மியூா், பள்ளிப்பட்டு, கோட்டூா் காா்டன், ஆா்.கே.மடம் தெரு, இந்திரா நகா்.

பெருங்குடி: கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம்.

சோழிங்கநல்லூா்: ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, எழில் நகா், கண்ணகி நகா், காரப்பாக்கம், வெட்டுவான்கேணி, சோழிங்கநல்லூா், ஒக்கியம்-துரைப்பாக்கம் ஆகிய பகுதிளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

அவசரத் தேவைகளுக்கு இணையதள முகவரியை பயன்படுத்தி லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ளலாம்.

கூடுதல் தகவல் அறிய 044-4567 4567 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். மேலும், குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீா் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.