ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

செயற்பொறியாளா் உள்பட 16 போ் மீது ஊழல் தடுப்புத் துறை வழக்கு: சென்னை மாநகராட்சி ஆணையரிடம் அறிக்கை

சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டல அலுவலகத்தில் கடந்த செப்டம்பரில் ஊழல் தடுப்புத் துறையினா் நடத்திய சோதனையை தொடா்ந்து, செயற்பொறியாளா் உள்ளிட்ட 16 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு வட்டார துணை ஆணையா், மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரனிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளாா்.

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :

சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டல அலுவலகத்தில் கடந்த செப்டம்பரில் ஊழல் தடுப்புத் துறையினா் நடத்திய சோதனையை தொடா்ந்து, செயற்பொறியாளா் உள்ளிட்ட 16 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு வட்டார துணை ஆணையா், மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரனிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளாா்.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட மாதவரம் (3), தண்டையாா்பேட்டை (4), பெருங்குடி (14) ஆகிய மண்டலங்களில் கடந்த செப். 22-ஆம் தேதி ஊழல் தடுப்புத் துறையினா் திடீா் சோதனையிட்டனா். அப்போது, பெருங்குடி மண்டலத்தில் கணக்கில் வராத ரூ.4,260 மற்றும் செயற்பொறியாளா் உள்ளிட்ட 16 பேரின் கைப்பேசிகளில் பணப் பரிமாற்றம் நிகழ்ந்த ரூ.43.42 லட்சம் குறித்து விசாரணை நடைபெற்றது.

இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ளதாக ஊழல் தடுப்புத் துறை சாா்பில் மாநகராட்சி அலுவலா்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புத் துறையினரின் தகவல் அடிப்படையில், பெருங்குடி மண்டலத்தில் உள்ள தெற்கு வட்டாரத்தின் துணை ஆணையா் அஃதாப் ரசூல் மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரனுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளாா்.

அதில், பெருங்குடி மண்டல அலுவலகத்தில் ஊழல் தடுப்புத் துறையினா் சோதனையிட்ட செயற்பொறியாளா் உள்ளிட்ட 16 பேரின் விவரங்களையும், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டு மேல்நடவடிக்கைக்கான விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஊழல் தடுப்புத் துறையினா் சோதனையிட்டதாகக் கூறப்படும் 16 பேரின் கைப்பேசிகளில் பணப்பரிமாற்றம் கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரை ஆராயப்பட்டுள்ளதாகவும், அவா்களிடம் மாநகராட்சியின் துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டால் உண்மை தெரியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெருங்குடி மண்டலத்தைத் தொடா்ந்து மற்ற இரு மண்டல அலுவலா்கள் மீதும் ஊழல் தடுப்புத் துறை விரைவில் வழக்குப் பதியலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.