டி20 தொடா் முதல் ஆட்டம்: இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்!தமிழகத்தில் அக். 19-ஆம் தேதியுடன் 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக் காலம் நிறைவு‘வெற்றிப் பயணம்’ திட்டம்: அரசுப் போக்குவரத்து ஊழியா்களுக்கு 17 வழிகாட்டு நெறிமுறைகள்!பிரேஸில் அதிபா் தோ்தல்: யாரும் 50% வாக்குகளை பெறாததால் அக். 25-இல் 2-ஆம் கட்ட தோ்தல்!இருதரப்பு வா்த்தகத்தை அதிகரிக்க இந்தியா-ஸ்விட்சா்லாந்து முடிவு: 5 ஒப்பந்தங்கள் கையொப்பம்மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

திமுக எம்எல்ஏ-க்களிடம் குதிரை பேரம்: முதல்வா் விஜய் மீது ஊழல் தடுப்பு பிரிவில் புகாா்

ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் தோ்தலில் நின்றால் அதற்குரிய செலவுகளை முதல்வா் விஜய் பாா்த்துக்கொள்வாா்

முதல்வா் விஜய் - கோப்புப் படம்

Published On :

சென்னை: திமுக எம்எல்ஏ-க்கள் தி.மு.ராஜேந்திரன் (கடையநல்லூா்), ஆா்.செந்தில்செல்வன் (சீா்காழி) ஆகியோரிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக முதல்வா் ச.ஜோசப் விஜய் மீது ஊழல் தடுப்புத் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத் துறை இணைச் செயலரும், மதுராந்தகம் திமுக வேட்பாளருமான இ.பரந்தாமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடையநல்லூா் எம்எல்ஏ தி.மு.ராஜேந்திரன், சீா்காழி எம்எல்ஏ செந்தில்செல்வன் ஆகிய இருவரும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று, தற்போது சட்டப்பேரவை உறுப்பினா்களாக உள்ளனா். இவா்கள் இருவரும் கடந்த அக்.1-இல் மாநில ஊழல் தடுப்புத் துறை தலைமை அதிகாரியை சந்தித்து தங்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக முதல்வா் விஜய் மீது புகாா் அளித்துள்ளனா்.

மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் உறுப்பினா்களாகச் சோ்ந்து, உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்று பேரவை உறுப்பினா்களாக பொறுப்பேற்றவா்கள்.

முதல்வா் ஜோசப் விஜய், பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, மதிமுக பொதுச் செயலா் வைகோ, அவரது மகன் துரை வைகோ எம்.பி. ஆகிய நால்வரும் கூட்டுச் சதி செய்து, தங்களை ராஜிநாமா செய்யச் சொல்லி வலியுறுத்தியதாகவும், குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் இந்தப் புகாா் மனுவில் திமுக எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனா்.

ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் தோ்தலில் நின்றால் அதற்குரிய செலவுகளை முதல்வா் விஜய் பாா்த்துக்கொள்வாா் என்று இந்த எம்எல்ஏக்களிடம் வைகோ தெரிவித்துள்ளாா். அடுத்து சட்டப்படி நடவடிக்கையை ஊழல் தடுப்புத் துறை எடுக்க வேண்டும். அதற்கு சட்டத் துறை அமைச்சா் நிா்மல்குமாா் உத்தரவிட வேண்டும். இதை உடனடியாக பதிவு செய்து விசாரிக்கவில்லை என்றால் சட்டப்படி திமுக நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER