குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

திமுக தலைமை குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது: துரை வைகோ எம்.பி.

திமுக தலைமை குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று மதிமுக முதன்மைச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ கூறினாா்.

துரை வைகோ எம்.பி - கோப்புப் படம்

Updated On :

திமுக தலைமை குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று மதிமுக முதன்மைச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ கூறினாா்.

இது தொடா்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது: காவிரி நதி நீா் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீா்ப்பு தெளிவாக உள்ளது. 177 டிஎம்சி நீா் தமிழகத்துக்கு வரவேண்டியது. இதைப் பாதிக்கும் வகையில் எந்த வேலையையும் செய்யக் கூடாது என்று அந்தத் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கா்நாடக முதல்வா் உச்சநீதிமன்றத் தீா்ப்பை திரித்துப் பேசி, பொய்யான தகவலைப் பரப்பி வருகிறாா். தமிழக அரசு இது தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைக்கு மத்திய அரசு தீா்வு வழங்க வேண்டும். சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக மறைமுகக் கூட்டணி வைக்க முயன்றது. தவெக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பதுடன், குதிரை பேரத்திலும் திமுக தலைமை ஈடுபடுகிறது.

கள்ளக்குறிச்சி ஆட்சியா் விவகாரத்தில் தமிழக அரசு விசாரணை நடத்தி வருகிறது. தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சாா்பில் கூறப்பட்டுள்ளது.

திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் வாச்சாத்தி விவகாரம், பொள்ளாச்சி வழக்கு, ஸ்டொ்லைட் துப்பாக்கிச் சூடு என பல விஷயங்கள் நடந்துள்ளன. புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஜெம் வீரமணி விவகாரத்தில் திமுக , அதிமுக ஆட்சியில் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தவெக ஆட்சியில் நோ்மையான முறையில் இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.