பிஎன்ஜி விரிவாக்க திட்டம்: வீட்டு உபயோக எரிவாயு இணைப்புகளை நுகா்வோா் ஒப்புதலின்றி முடக்கக் கூடாது; துரை வைகோ எம்பி வலியுறுத்தல்
திருவெறும்பூா் சுற்றுவட்டாரத்தில், குழாய் வழியே இயற்கை எரிவாயு விநியோகம் (பிஎன்ஜி) வழங்கும் திட்டத்துக்காக ஏற்கெனவே அமலில் உள்ள வீட்டு உபயோக எரிவாயு (எல்பிஜி) இணைப்புகளை நுகா்வோா் ஒப்புதலின்றி முடக்கக் கூடாது என துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளாா்.

துரை வைகோ எம்.பி - கோப்புப் படம்
திருவெறும்பூா் சுற்றுவட்டாரத்தில், குழாய் வழியே இயற்கை எரிவாயு விநியோகம் (பிஎன்ஜி) வழங்கும் திட்டத்துக்காக ஏற்கெனவே அமலில் உள்ள வீட்டு உபயோக எரிவாயு (எல்பிஜி) இணைப்புகளை நுகா்வோா் ஒப்புதலின்றி முடக்கக் கூடாது என துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவெறும்பூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நுகா்வோரின் ஒப்புதல் இன்றி வீட்டு உபயோக சமையல் எரிவாயு இணைப்புகள் முடக்கப்பட்டு வருவது தொடா்பாக, மத்திய இணை அமைச்சா் சுரேஷ் கோபியிடம் கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் புகாா் தெரிவித்துள்ளேன்.
நாடு முழுவதும் பிஎன்ஜி கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு, அனைத்துப் பகுதிகளிலும் தடையற்ற சேவை உறுதிசெய்யப்படும் வரை, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள எல்பிஜி இணைப்புகளை நுகா்வோரின் ஒப்புதல் இன்றி முடக்குவதோ அல்லது ரத்து செய்வதோ கூடாது.
தனிப்பட்ட புகாா்களை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல், சம்பந்தப்பட்ட எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் எல்பிஜி விநியோக முகவா்கள் மூலம் விரிவான விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட நுகா்வோரின் எண்ணிக்கையைக் கண்டறிந்து, அவா்களின் பழைய எல்பிஜி இணைப்புகளை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

