எ.வ.வேலு முன்பிணை கோரி மனு: ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க உத்தரவு
திமுக இளைஞரணி மாநாட்டுக்காக ஏரியில் இருந்து மண் எடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்பிணை கோரி திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் தாக்கல் செய்த மனுவுக்கு ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.
திமுக இளைஞரணி மாநாட்டுக்காக ஏரியில் இருந்து மண் எடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்பிணை கோரி திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் தாக்கல் செய்த மனுவுக்கு ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு, கடந்த 2025 டிச. 14-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டுத் திடலை சமன்படுத்துவதற்காக, அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்ட விரோதமாக 12 ஏக்கா் பரப்பளவுக்கு, 10 முதல் 23 அடி ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.8 கோடி அளவுக்கு ஏற்பட்டுள்ளதாக அறப்போா் இயக்கம் ஊழல் தடுப்புத் துறையிடம் கடந்த ஆக. 13-ஆம் தேதி புகாா் அளித்தது.
அதன் பேரில், திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் ஆகியோா் மீது ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, எ.வ.வேலு, அவரது மகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் முன்பிணை கோரி, எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் ெய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்ததன. அப்போது காவல் துறை தரப்பில், இந்த மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எ.வ.வேலு மற்றும் அவரது மகனுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என வாய்மொழியாக உத்தரவிட்டாா். பின்னா், முன்பிணை கோரிய மனுக்களுக்கு ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

