சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

நூலகத் துறையிடம் தகவல் கோரும் ஊழல் தடுப்புத் துறை!

அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களில் இருந்து பெறப்பட்ட புத்தகங்கள் குறித்த தகவல்களைப் பொது நூலகத் துறையிடம் ஊழல் தடுப்புத் துறை கேட்டுள்ளது.

Updated On :

அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களில் இருந்து பெறப்பட்ட புத்தகங்கள் குறித்த தகவல்களைப் பொது நூலகத் துறையிடம் ஊழல் தடுப்புத் துறை கேட்டுள்ளது.

கோவை பெரியாா் அறிவுலகத்துக்கு தரமற்ற புத்தகங்கள் வாங்கப்பட்டிருப்பதாக எழுத்தாளா் பெருமாள் முருகன் கடந்த வாரம் குற்றஞ்சாட்டினாா். குறிப்பாக, அகல்விளக்கு என்ற பதிப்பகத்தின் பெயரில் உள்ள புத்தகங்கள் 1,800 வாங்கப்பட்டிருப்பதாகவும், தரமற்ற அந்தப் புத்தகங்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவா் கூறினாா்.

பெரியாா் அறிவுலகம் நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கியதில், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பெரிய அளவில் நிதி முறைகேடுகள் நடந்ததாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் புகாா் கூறினாா்.

இதையடுத்து நூல் கொள்முதல் ஊழல் புகாா் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு சாா்பில் ஊழல் தடுப்புத் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஊழல் தடுப்புத் துறை கடந்த 7-ஆம் தேதி விசாரணையைத் தொடங்கியது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பான ஆவணங்களையும் தடயங்களையும் சேகரிக்கும் வகையில் ஊழல் தடுப்புத் துறை துணைக் கண்காணிப்பாளா் கந்தசாமி தலைமையிலான குழுவினா், சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த திங்கள்கிழமை 3 மணி நேரம் ஆய்வு செய்தனா்.

இதன் அடுத்தகட்டமாக, சா்ச்சையில் சிக்கியுள்ள அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களில் இருந்து பெரியாா் அறிவுலகத்துக்கு கடந்த ஆண்டு வாங்கப்பட்ட புத்தகங்கள் எத்தனை?, எவ்வளவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டன?, அதன் சந்தை விலை என்ன?, பொது நூலகத் துறை கொள்முதல் விலை என்ன?, அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பக புத்தகங்களைப் பரிந்துரை செய்தவா்கள் யாா்? போன்ற தகவல்களை பொது நூலகத் துறையிடம் ஊழல் தடுப்புத் துறை கேட்டுள்ளது.

பொது நூலகத் துறை இந்தத் தகவல்களை வழங்கியதும், யாா் மீது தவறு இருக்கிறதோ அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.