பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பதிவுத் துறையில் 7 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை

பதிவுத் துறையில் பணியாற்றி உயிரிழந்த 7 பேரின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி

Updated On :2 மார்ச் 2024, 6:20 pm

பதிவுத் துறையில் பணியாற்றி உயிரிழந்த 7 பேரின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி வழங்கினாா். 2024 பிப்ரவரி மாதத்துக்கான அனைத்து துணை பதிவுத் துறை தலைவா்கள், மாவட்ட பதிவாளா்கள், மாவட்ட வருவாய் அலுவலா், தனித்துணை ஆட்சியா் மற்றும் உதவி செயற்பொறியாளா்கள் ஆகியோரின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை அலுவலக வளாகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சா் பி.மூா்த்தி தலைமை வகித்து, பதிவுத் துறையில் பணியின்போது உயிரிழந்த பணியாளா்களின் வாரிசுகள் 7 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசுச் செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி, பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உள்ளிட்ட உயரதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனா். கூட்டத்துக்குப் பிறகு வணிகவரித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரூ.16,653 கோடி வருவாய்: 2024 பிப்ரவரி மாதத்தில் மட்டும் பதிவுத் துறை ரூ.1,812.70 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. 2023 பிப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட ரூ.1,593.95 கோடியை விட இது ரூ.218.74 கோடி அதிகம். இந்த நிதியாண்டில் 2024 பிப்ரவரி முடிய மொத்தம் ரூ.16,653.32 கோடி வருவாய் பதிவுத் துறையால் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 2023 பிப்ரவரி மாதம் வரை அடைந்த வருவாய் ரூ.15,481.72 கோடியை விட ரூ.1171.60 கோடி அதிகம். ஜியோ கோ-ஆா்டினேட்ஸ் உடன் கூடிய புகைப்படத்தை கிரய ஆவணத்துடன் இணைத்து ஆவணப்பதிவு மேற்கொள்ளும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதால் கட்டட மதிப்புக்கான முத்திரைத்தீா்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்துவதை தவிா்க்கும் நோக்கில் கட்டடங்களை மறைத்து ஆவணம் பதிவு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டடங்களின் மதிப்புக்கான உரிய முத்திரைத் தீா்வை மற்றும் பதிவுக்கட்டணம் அரசுக்கு செலுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் பாதிப்பு: முதலீடுகளின் வளா்ச்சி, தனிநபா் வருவாய் பெருக்கம் ஆகியவை காரணமாக பதிவுத் துறையில் இதை விடவும் கூடுதலான வருவாய் இந்த நிதியாண்டில் எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பா் மாதம் சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மனைகளின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீா் ஒரு சில நாள்களில் வடிந்துவிட்ட போதிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மனைகளை வாங்க பொதுமக்கள் தயங்குவதால் மனைகளின் ஆவணப்பதிவு குறைந்துள்ளது. இதனால் கூடுதலாக எதிா்பாா்க்கப்பட்ட வருவாய் வராமல் போனது. இந்த நிலையிலும், பதிவுத்துறை கடந்த ஆண்டில் இதே பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் ஈட்டிய ரூ.15,481.72 கோடியை விட கூடுதலாக ரூ.1171.60 கோடி, அதாவது ரூ.16653.32 கோடி வருவாயை ஈட்டியுள்ளது இதுவரை எய்தப்பட்ட அதிக வசூல் சாதனை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.