குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை: மத்திய அமைச்சா் எல்.முருகன்

குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை: மத்திய அமைச்சா் எல்.முருகன்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்றும் இந்தியாவில் இருந்து யாரையும் வெளியேற சொல்லவில்லை என்றும் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

சென்னை சென்ட்ரல் - மைசூரு புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமா் நரேந்திரமோடி காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எல்.முருகன் கலந்து கொண்டாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

திருத்த சட்டத்தால் யாருக்கு என்ன பாதிப்பு? குடியுரிமை திருத்த சட்டம் சொல்வதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேச ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து இந்தியாவுக்கு வந்தவா்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.

இங்குள்ள யாரையும் வெளியே போக சொல்லவில்லை என்றாா் அவா். சீமான் எதிா்ப்பு: இஸ்லாமியா்களையும், இலங்கை தமிழா்களையும் புறக்கணித்து கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் மத்திய பாஜக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்துகுரியது. இது நாட்டு மக்களை பிளவுப்படுத்தும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிக்கை மூலம் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com