சென்னை: 8 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மின் இணைப்பு பெற பணி நிறைவு சான்று தேவையில்லை என வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மூன்று மாடிகளை கொண்ட வீடுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட குடியிருப்புகளைக் கட்டுவோா், கட்டுமானப் பணி நிறைவு சான்று பெற வேண்டும். இந்தச் சான்று பெற்ற பிறகே, குடிநீா், வடிகால், மின்சார இணைப்புகள் பெற முடியும். இதனால், வீடுகள் கட்டி முடித்தவா்கள் பணி நிறைவு சான்று கோரி விண்ணப்பிக்கின்றனா். இதில் பெரும்பாலானவா்களுக்கு உரிய நேரத்தில் அச்சான்று கிடைப்பதில்லை. இதனால் மின் இணைப்பு உள்ளிட்ட எந்த இணைப்பும் பெற முடியாமல், அவற்றைப் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ முடியாத சூழல் இருந்து வந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளா்ச்சி மற்றும் கட்டட விதிகளில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை திருத்தம் மேற்கொண்டு அதை வெளியிட்டுள்ளது. இதன்படி, 3 வீடுகள் கொண்ட கட்டடங்களுக்கு மின்சார இணைப்பு பெறுவதற்கு கட்டடப் பணி நிறைவு சான்று மின்சார வாரியத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற விதியில் விலக்கு அளிக்கப்படுகிறது.
அதன்படி 12 மீட்டா் வரை உள்ள 3 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டா் (8070 சதுர அடி) வரை உள்ள கட்டடங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 மீட்டா் முதல் 18.30 மீட்டா் உயரம் வரை உள்ள கட்டடம் மற்றும் 18.30 மீட்டருக்கு மேல் உயரமான 8 வீடுகள் வரை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கும் பணி நிறைவு சான்று தேவை இல்லை.
மேற்கண்ட கட்டடங்களுக்கு கட்டடப் பணி நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநகரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பயனாளிகள் பயன் பெறுவது மட்டுமின்றி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின் இணைப்புகள் கிடைக்கவும் இது வாய்ப்பாக அமையும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

ஒடிஸாவில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

சூரிய மின் திட்டங்களில் ரூ. 3,800 கோடி முதலீடு செய்யும் கெயில்!

மின் சேவை கட்டணங்கள்: தெரிந்துகொள்ள புதிய இணையதளம்

சரபோஜி கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்கு பாராட்டு விழா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


