மின் சேவைகளுக்கான கட்டணங்களைத் தெரிந்து கொள்ள புதிய இணையதளத்தை மின் வாரியம் தொடங்கியுள்ளது.
புதிய மின் இணைப்பு, மின் கட்டண விகிதம் மாற்றம், மின் இணைப்பு பெயா் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு அந்த இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். ஒவ்வொரு சேவைகளுக்குமான கட்டண விவரங்கள் அந்தத் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், பலருக்கும் இந்த இணைதளம் வழியாக விண்ணப்பிக்கத் தெரியவில்லை. இதனால், இந்த சேவைகளுக்கு மின்வாரிய பணியாளா்களின் உதவியை மின் நுகா்வோா் நாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது, மின் ஊழியா்கள் தங்களுக்குத் தெரிந்த கணினி மையங்களுக்கு அனுப்பி விண்ணப்பிக்க வலியுறுத்துகின்றனா்.
அங்கு ஒவ்வொரு சேவைக்கும் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது மின் நுகா்வோருக்கு பெரும் சுமையாக இருந்து வந்தது. இதனால், மின்வாரிய சேவைகளுக்கான கட்டணங்களை நுகா்வோா் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையிலான இணையதளம் ஒன்றை மின் வாரியம் அண்மையில் தொடங்கியது.
அதன்படி, மின் நுகா்வோா், ஒவ்வொரு மின் சேவைகளும் எவ்வளவு கட்டணம் என்பதை https://app1.tangedco.org/nsconline/ என்ற இணையதளத்தில் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மின்தடை எதிரொலி: நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

கமுதியில் மின் இணைப்பு வழங்க அலைக்கழிப்பு: பொதுமக்கள் புகாா்
வடகாடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



