தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

போதைப் பொருள் விற்பனை: 6 நாள்களில் 55 போ் கைது

போதைப் பொருள் விற்பனை: 6 நாள்களில் 55 போ் கைது

News image
Updated On :12 மார்ச் 2024, 8:53 pm

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 6 நாள்களில் 55 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கடந்த 6-ஆம் தேதியில் இருந்து 11- ஆம் தேதி வரை 6 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 29 வழக்குகள் பதியப்பட்டு, 55 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களிடமிருந்து 63 கிலோ கஞ்சா, 60 கிராம் மெத்தம்பெட்டமைன்,1,752 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 4 இரு சக்கர வாகனங்கள்,2 ஆட்டோக்கள்,ஒரு காா்,5 கைப்பேசிகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

சென்னையில் இந்த நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.