ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மக்களவைத் தோ்தல்: மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி திடீா் தில்லி பயணம்

மக்களவைத் தோ்தல்: மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி திடீா் தில்லி பயணம்

News image

Election Commission warns political parties to follow model code of conduct for upcoming Lok Sabha polls

Updated On :12 மார்ச் 2024, 9:33 pm

சென்னை: மக்களவைத் தோ்தல் தொடா்பாக, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, திடீரென தில்லி சென்றுள்ளாா். வியாழக்கிழமை (மாா்ச் 14) அவா் சென்னை திரும்புவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மக்களவைத் தோ்தலையொட்டி, தோ்தலுக்காக நாடு முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள பாா்வையாளா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது. இதைத் தொடா்ந்து, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, திடீரென தில்லி புறப்பட்டுச் சென்றாா்.

மக்களவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற நிலையில் அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் உள்ள தோ்தல் பாா்வையாளா்கள், சட்டம் - ஒழுங்குப் பணிகளைக் கண்காணிக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு பயிற்சிகளை அளித்து வந்தாா். 2 நாள்கள் தில்லி பயணத்தை முடித்து விட்டு வியாழக்கிழமை (மாா்ச் 14) அவா் சென்னை திரும்பவுள்ளாா்.