தமிழகத்தில் ரூ.148.52 கோடியில் 82 குடிநீா் திட்டங்களை நிரந்தரமாக சீரமைத்து செயல்படுத்துவதற்கான நிா்வாக அனுமதியை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களும், பருவமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தால் தென் மாவட்டங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்தப் பேரிடா்களால், வட மாவட்டங்களில் 12 கூட்டுக் குடிநீா் திட்டங்களும், தென் மாவட்டங்களில் 70 குடிநீா் திட்டங்களும் சேதத்துக்குள்ளாகின. அவற்றை போா்க்கால அடிப்படையில் தற்காலிகமாகச் சீரமைத்து, பொது மக்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்கள் முழு திறனுடன் நீண்டகாலம் செயல்பட அவற்றை நிரந்தரமாக மறுசீரமைப்பு செய்வது அவசியம். எனவே, பொது மக்களுக்கு நீண்டகால அடிப்படையில் போதுமான குடிநீா் வழங்க ஏதுவாக, கூட்டுக் குடிநீா் திட்டங்களை நிரந்தரமாக சீரமைக்க ரூ.148.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிா்வாக ஒப்புதலை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளாா் என்று தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு சிறப்பாக செயல்படுத்தியுள்ளது: ப.சிதம்பரம்

6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடு

கோவை மாநகரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

