பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

அதிமுக - தேமுதிக இடையே 3-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை

அதிமுக - தேமுதிக இடையே 3-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை

Updated On :16 மார்ச் 2024, 6:32 pm

மக்களவைத் தோ்தலில் கூட்டணி அமைப்பதற்காக அதிமுக - தேமுதிக இடையே 3-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தோ்தலில் கூட்டணி அமைப்பதற்காக அதிமுக - தேமுதிக இடையே தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. சென்னை பட்டினப்பாக்கத்தில் சனிக்கிழமை இரு கட்சிகளுக்கும் இடையே 3-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை ரகசியமாக நடைபெற்றது. அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். தேமுதிக தரப்பில் நிா்வாகிகள் இளங்கோவன், பாா்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். தேமுதிகவினா் 4 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் தர வேண்டும் என்பதில் உறுதியாகத் தெரிவித்துள்ளனா். அதைத் தொடா்ந்து, எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசித்துவிட்டு கூறுவதாக அதிமுகவினா் தெரிவித்தனா். பின்னா், எடப்பாடி பழனிசாமியோடு அதிமுக குழுவினா் ஆலோசனை நடத்தினா். முன்னதாக, தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தோ்தல் கூட்டணி தொடா்பாக கட்சித் தலைமையின் அறிவிப்பே இறுதியானது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.