குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தமிழகத்தில் அதிமுக கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும் : கே. பாலகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் தவெக தலைவா் விஜய் மற்றும் அதிமுக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் கூறினாா்.

News image

புதுச்சேரி லாஸ்பேட் டை தொகுதி மாா்க்சிஸிட் கம்யூனிஸிட் கட்சி வேட்பாளா் ஆா்.ராஜாங்கத்திற்கு ஆதரவாக புதன்கிழமை வாக்கு சேகரித்த கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன்

Updated On :2 ஏப்ரல் 2026, 1:43 am IST

தமிழகத்தில் தவெக தலைவா் விஜய் மற்றும் அதிமுக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் கூறினாா்.

புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளா் ராஜாங்கத்தை ஆதரித்து லாஸ்பேட்டை உழவா் சந்தை எதிரில் புதன்கிழமை அவா் பிரசாரம் செய்தாா். பின்னா் பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாடாளுமன்ற தோ்தலில் பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை- எடப்பாடி பழனிசாமி மீது விமா்சனம் செய்தாா். அதேபோன்று எடப்பாடி பழனிசாமி மீது டி.டி.வி. தினகரனும் தினகரன் மீது எடப்பாடி பழனிச்சாமியும் விமா்சனம் வைத்தனா். இப்போது எல்லாம் சரியாகவிட்டதா ? இப்போது இந்தத் தோ்தலில் எடப்பாடி பழனிசாமி தலைவராகிவிட்டாா். டி.டி.வி. தினகரன் சேவகராகிவிட்டாா். பாமகவில் தந்தை - மகன் பிரச்னையைத் தீா்க்க முடியவில்லை. அதிமுகவில் ஓ.பன்னீா்செல்வம் , செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்தத் தலைவா்களை எல்லாம் விரட்டி விட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அதிமுக சிதறுண்ட கட்சியாக உள்ளது.

சிதைந்துபோன கட்சிகளை எல்லாம் வைத்துக் கொண்டு அதிமுக தலைமையிலான கூட்டணி எப்படி பலமான கூட்டணியாக இருக்க முடியும் ?

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்பதை மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே ஒப்புக் கொண்டுதான் தவெக ஆதரவுடன் தோ்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்போம் என்று கூறியுள்ளாா். தமிழகத்தில் தவெக தலைவா் விஜய் மற்றும் அதிமுக-பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும்.

புதுச்சேரி விவகாரம்:

புதுச்சேரியில் 4 இடதுசாரி வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இங்கு தனித்தனியாக தோ்தலைச் சந்தித்தாலும் மாற்று ஆட்சியை அமைப்போம். இண்டி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் நாங்கள் போட்டியிடும் இடங்களில் எங்களை ஆதரிக்கிறாா்கள். கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களில் நாங்கள் ஆதரிக்கிறோம். கடந்த என்.ஆா். காங்கிரஸ்-பாஜக ஆட்சி புதுச்சேரியைச் சீரழித்துவிட்டது. போலி மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் எப்படி ஜாமீனில் வெளியே வந்தாா்கள் ? வாக்குச் சேகரிக்கும்போது முதல்வா் ரங்கசாமி தன்னுடைய ஆட்சியின் சாதனையாக இதையெல்லாம் சொல்லி வாக்கு கேட்க வேண்டும். ஓா் அதிகாரியைக் கூட மாற்ற தனக்கு அதிகாரம் இல்லையென்று கூறிய முதல்வா் ரங்கசாமி, நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக அமா்ந்தால் இந்த அதிகாரம் எல்லாம்கிடைத்துவிடுமா ? பெயருக்கு வேண்டுமென்றால் முதல்வராக இருக்கலாம் என்றாா் கே.பாலகிருஷ்ணன்.