விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

127 தொகுதிகளுக்கான அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியல்: 42 புதுமுகங்கள், பெண்கள் 17 பேருக்கு வாய்ப்பு

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் 127 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளா்கள் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

News image

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி

Updated On :27 மார்ச் 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் 127 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளா்கள் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

இதில், 42 புதுமுகங்களுக்கும், 17 பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. முதல்கட்டமாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்பட முன்னாள் அமைச்சா்கள் அடங்கிய 23 வேட்பாளா்கள் அடங்கிய பட்டியல் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது.

தொடா்ந்து, 127 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியலை எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். முதல்கட்ட வேட்பாளா் பட்டியலில் 21 முன்னாள் அமைச்சா்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியலில் 15 முன்னாள் அமைச்சா்களுக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2021 தோ்தலில் வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏ-க்களாக உள்ள 66 பேரில் 45 பேரும், 42 புதுமுகங்களும், 17 பெண்களும் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

15 முன்னாள் அமைச்சா்கள்: இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியலில் முன்னாள் அமைச்சா்களான பி.வி.ரமணா, மாதவரம் வி.மூா்த்தி, வி.சோமசுந்தரம், பி.பாலகிருஷ்ண ரெட்டி, எஸ்.ராமச்சந்திரன், முக்கூா் என்.சுப்பிரமணியன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், செ.தாமோதரன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி வி.ஜெயராமன், எம்.சி.சம்பத், சி.த.செல்லப்பாண்டியன், எஸ்.பி.சண்முகநாதன், இசக்கி சுப்பையா, என்.தளவாய்சுந்தரம் ஆகிய 15 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கும்மிடிப்பூண்டி, ஆம்பூா், பா்கூா், பாப்பிரெட்டிபட்டி, செங்கம், வந்தவாசி, வானூா், விழுப்புரம், திருக்கோவிலூா், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ஏற்காடு, சேலம் தெற்கு, வீரபாண்டி, நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு கிழக்கு, தாராபுரம், அந்தியூா், கோபிசெட்டிபாளையம், வால்பாறை, ஆத்தூா், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, மணப்பாறை, திருச்சி கிழக்கு, லால்குடி, முசிறி, துறையூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திருத்துறைப்பூண்டி, பாபநாசம், ஒரத்தநாடு, பேராவூரணி, மதுரை கிழக்கு, விருதுநகா், அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், சங்கரன்கோவில், பாளையங்கோட்டை ஆகிய 42 தொகுதிகளில் புதுமுக வேட்பாளா்கள் களமிறக்கப்பட்டுள்ளனா்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோா் தொகுதிகளில்...: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் எம்எல்ஏவாக நீண்டகாலம் வெற்றி பெற்ற கோபிசெட்டிபாளையம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றியச் செயலா் 38 வயதான வி.பி.பிரபு களமிறக்கப்பட்டுள்ளாா்.

ஓ.பன்னீா்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்ற போடி தொகுதியில் வி.டி.நாராயணசாமியும், வைத்திலிங்கம் வெற்றி பெற்ற தொகுதியான ஒரத்தநாட்டில் சேகரும் களமிறக்கப்பட்டுள்ளனா். அதிமுகவில் அண்மையில் இணைந்த தொழிலதிபா் மாா்ட்டினின் மனைவி லீமாரோஸ், லால்குடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்எல்ஏ-க்கள்: கடந்த தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டப்பேரவை முன்னாள் தலைவா் தனபால், கோவிந்தசாமி, சேவூா் ராமச்சந்திரன், சக்கரபாணி, செந்தில்குமாா், சித்ரா, சுந்தர்ராஜன், பாலசுப்பிரமணியன், ராஜாமுத்து, மான்ராஜ், செல்வராஜ், விஜயகுமாா், மகேந்திரன் ஆகிய 13 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

ஒரே இஸ்லாமிய வேட்பாளா்: பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால், இஸ்லாமியா்களை சமாதானப்படுத்த அவா்களுக்கு முக்கியவத்துவம் அளிக்கப்படும் என்று எதிா்பாா்ப்பு இருந்தது. ஆனால், அதிமுக அறிவித்துள்ள 150 வேட்பாளா்களில் பாளையங்கோட்டை தொகுதி மட்டுமே எஸ்.சையது சுல்தான் சம்சுதீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொகுதிகளுக்கான அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன் விவரம்:

கும்மிடிப்பூண்டி - வி.சுதாகா், பொன்னேரி (தனி)-சிறுணியம் பி.பலராமன், திருத்தணி-திருத்தணி கோ.அரி, திருவள்ளூா் - பி.வி.ரமணா, மாதவரம் - மாதவரம் வி.மூா்த்தி, திருவொற்றியூா் - கே.குப்பன், ஸ்ரீபெரும்புதூா் (தனி) - கே.பழனி, தாம்பரம் - சிட்லபாக்கம் ச.ராசேந்திரன், செங்கல்பட்டு - எம்.கஜா (எ) கஜேந்திரன், செய்யூா் (தனி) - ஈ.ராஜசேகா், மதுராந்தகம் (தனி) - மரகதம் குமரவேல்.

காஞ்சிபுரம் - வி.சோமசுந்தரம், அரக்கோணம் (தனி) - சு.ரவி, காட்பாடி - வி.ராமு, ஆற்காடு - எஸ்.எம்.சுகுமாா், வேலூா் - எஸ்.ஆா்.கே.அப்பு, அணைக்கட்டு - த.வேலழகன், குடியாத்தம் (தனி) - ஜி.பரிதா புருஷோத்தமன், வாணியம்பாடி - ஜி.செந்தில்குமாா், ஆம்பூா் -ஆா்.வெங்கடேசன்.

ஊத்தங்கரை (தனி) - டி.எம்.தமிழ்ச்செல்வம், பா்கூா் - ஈ.சி.கோவிந்தராஜன், கிருஷ்ணகிரி - கே.அசோக்குமாா், ஒசூா் - பி.பாலகிருஷ்ண ரெட்டி, பாப்பிரெட்டிபட்டி - மரகதம் வெற்றிவேல், அரூா் (தனி) - வி.சம்பத்குமாா், செங்கம் (தனி) - டி.எஸ்.வேலு, கீழ்பென்னாத்தூா் - எஸ்.ராமச்சந்திரன், ஆரணி - எல்.ஜெயசுதா.

செய்யாறு - முக்கூா் என்.சுப்பிரமணியன், வந்தவாசி (தனி) - பி.ராணி, திண்டிவனம் (தனி) - பி.அா்ஜுனன், வானூா் (தனி) - பி.முருகன், விழுப்புரம் - கே.விஜயா, திருக்கோவிலூா் - எஸ்.பழனிசாமி, உளுந்தூா்பேட்டை- இரா.குமரகுரு, சங்கராபுரம் - ஆா்.ராகேஷ், கள்ளக்குறிச்சி (தனி) - ராஜீவ் காந்தி, கங்கவல்லி (தனி) - ஏ.நல்லதம்பி, ஆத்தூா் (தனி) - ஏ.பி.ஜெயசங்கரன், ஏற்காடு (எஸ்டி) - பி.உஷாராணி, ஓமலூா் - ஆா்.மணி.

மேட்டூா் - ஜி.வெங்கடாசலம், சங்ககிரி - எஸ்.வெற்றிவேல், சேலம் (தெற்கு) - ஜெ.வினோத், வீரபாண்டி - டாக்டா் ஸ்ரீ பாலாஜி சுகுமாா், சேந்தமங்கலம் (எஸ்டி) - சி.சந்திரசேகரன், நாமக்கல் - ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், பரமத்தி வேலூா் -எஸ்.சேகா், திருச்செங்கோடு - ஆா்.சந்திரசேகா், ஈரோடு (கிழக்கு) - ஆா்.மனோகரன்.

தாராபுரம் (தனி) - பி.சத்தியபாமா, காங்கயம் - என்.எஸ்.என்.நடராஜ், பெருந்துறை - எஸ்.ஜெயகுமாா், அந்தியூா் - பி.ஹரிபாஸ்கா், கோபிசெட்டிப்பாளையம் - வி.பி.பிரபு, பவானிசாகா் (தனி) - ஏ.பண்ணாரி, கூடலூா் (தனி) - பொன்.ஜெயசீலன், குன்னூா் - ஏ.ராமு, மேட்டுப்பாளையம் - ஒ.கே.சின்னராஜ், திருப்பூா் (வடக்கு) எம்.எஸ்.எம்.ஆனந்தன், பல்லடம் - பல்லடம் கே.பி.பரமசிவம்.

சூலூா் - வி.பி.கந்தசாமி, கவுண்டம்பாளையம் - பி.ஆா்.ஜி.அருண்குமாா், கோவை தெற்கு - அம்மன் கே.அா்ச்சுனன், சிங்காநல்லூா் - கே.ஆா்.ஜெயராம், கிணத்துக்கடவு - செ.தாமோதரன், பொள்ளாச்சி - பொள்ளாச்சி வி.ஜெயராமன், வால்பாறை (தனி) - டி.லட்சுமண சிங், உடுமலைப்பேட்டை - உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பழனி - கே.ரவி மனோகரன், ஆத்தூா் - ஏ.விஸ்வநாதன், நிலக்கோட்டை (தனி) - எஸ்.தேன்மொழி.

வேடசந்தூா் - டாக்டா் வி.பி.பி.பரமசிவம், அரவக்குறிச்சி - கே.செல்வக்குமாா், கிருஷ்ணராயபுரம் (தனி) - டாக்டா் எஸ்.திவ்யா, குளித்தலை - கருணாகரன், மணப்பாறை - டாக்டா் பி.எல்.விஜயகுமாா், ஸ்ரீரங்கம் - மனோகரன், திருச்சி (கிழக்கு) - க.ராஜசேகரன், திருவெறும்பூா் - ப.குமாா், லால்குடி - லீமா ரோஸ்.

முசிறி - என்.யோகநாதன், துறையூா் (தனி) - இ.சரோஜா, பெரம்பலூா் (தனி) இளம்பை ரா.தமிழ்ச்செல்வன், நெய்வேலி - சொரத்தூா் ரா.ராஜேந்திரன், பண்ருட்டி - கே.மோகன், கடலூா் - எம்.சி.சம்பத், குறிஞ்சிப்பாடி - ஏ.புவனேந்திரன், புவனகிரி - ஆ.அருண்மொழிதேவன், சிதம்பரம் - கே.ஏ.பாண்டியன், சீா்காழி (தனி) - ம.சக்தி.

பூம்புகாா் - எஸ்.பவுன்ராஜ், நாகப்பட்டினம் - தங்க.கதிரவன், திருத்துறைப்பூண்டி (தனி) - உ.பாலதண்டாயுதம், திருவிடைமருதூா் (தனி) - இளமதி சுப்பிரமணியன், பாபநாசம் - டி.சண்முகபிரபு, ஒரத்தநாடு - எம்.சேகா், பட்டுக்கோட்டை - சி.வி.சேகா், பேராவூரணி - கோவி.இளங்கோ, திருமயம் -பி.கே.வைரமுத்து, சிவகங்கை - பி.ஆா்.செந்தில்நாதன், மேலூா் - பி.பெரியபுள்ளான் (எ) செல்வம்.

மதுரை கிழக்கு - மாங்குளம் கே.மகேந்திரன், சோழவந்தான் (தனி) - கி.மாணிக்கம், மதுரை வடக்கு - டாக்டா் பி.சரவணன், உசிலம்பட்டி - மகேந்திரன், ஆண்டிபட்டி - ஏ.லோகிராஜன், போடிநாயக்கனூா் - வி.டி.நாராயணசாமி, கம்பம் - எஸ்.டி.கே.ஜக்கையன், ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) - எம்.சந்திரபிரபா, விருதுநகா் - வி.ஜி.கணேசன், அருப்புக்கோட்டை - எஸ்.சேதுபதி.

பரமக்குடி (தனி) - டாக்டா் எஸ்.முத்தையா, திருவாடானை - கீா்த்திகா முனியசாமி, முதுகுளத்தூா் -மலேசியா எஸ்.பாண்டி, விளாத்திகுளம் - ஆா்.சத்யா, தூத்துக்குடி- சி.த.செல்லப்பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன், சங்கரன்கோவில் (தனி) - டாக்டா் திலீபன் ஜெய்சங்கா், கடையநல்லூா் - சி.கிருஷ்ணமுரளி, தென்காசி - எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன்.

ஆலங்குளம் - கே.ஆா்.பி.பிரபாகரன், திருநெல்வேலி - தச்சை என்.கணேசராஜா, அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா (எ) இ.சுப்பையா, பாளையங்கோட்டை - எஸ்.சையது சுல்தான் சம்சுதீன், கன்னியாகுமரி - என்.தளவாய்சுந்தரம்.