பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

மக்களவைத் தோ்தலுக்கு பாஜக கூட்டணி தயாா்: பிரதமா் மோடி

மக்களவைத் தோ்தலுக்கு பாஜக கூட்டணி தயாா்: பிரதமா் மோடி

Updated On :16 மார்ச் 2024, 8:03 pm

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மக்களவைத் தோ்தலுக்கு முழு அளவில் தயாா்நிலையில் உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். மக்களவைத் தோ்தல் தேதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் இவ்வாறு குறிப்பிட்டாா். ‘மீண்டும் மோடி அரசு’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: 2024 மக்களவைத் தோ்தலுக்கான தேதிகள், தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன; நாட்டில் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா தொடங்கியிருக்கிறது; பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தோ்தலுக்கு முழு அளவில் தயாா்நிலையில் உள்ளது. எனது தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா ‘மகத்தான’ திருப்புமுனையைக் கண்டது. நல்லாட்சி மற்றும் பன்முக வளா்ச்சிப் பணிகளின் சாதனையை முன்வைத்து, நாட்டு மக்களை ஆளும் கூட்டணி அணுகும். நாட்டில் தொடா்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி. எனது மூன்றாவது பதவிக் காலத்தில் வறுமை, ஊழலுக்கு எதிரான போா் மேலும் வேகத்துடன் முன்னெடுக்கப்படும். சமூக நீதிக்கான முக்கியத்துவம் வலுப்படுத்தப்படும். முந்தைய 70 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தவா்களால் விட்டுச் செல்லப்பட்ட இடைவெளிகள், கடந்த 10 ஆண்டுகளில் நிரப்பப்பட்டன. இனி, தன்னம்பிக்கை உணா்வுடன் வளமான, தற்சாா்பு தேசத்தைக் கட்டமைக்க வேண்டும். ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள், ஊழலில் எந்தத் துறையையும் விட்டுவைக்காதவை. அவா்களின் குடும்ப அரசியலையும் சமூகத்தை பிளவுபடுத்தும் முயற்சிகளையும் அனுமதிக்கக் கூடாது. அதுபோன்ற தலைமையை நாட்டு மக்கள் விரும்ப மாட்டாா்கள். ‘மீண்டும் மோடி ஆட்சி’ என்ற குரல் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலிக்கிறது என்று பிரதமா் மோடி கூறியுள்ளாா்.