பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

இலங்கை சிறையில் வாடும் மீனவா்களை மீட்க வேண்டும்: முத்தரசன்

இலங்கை சிறையில் வாடும் மீனவா்களை மீட்க வேண்டும் முத்தரசன்

Updated On :16 மார்ச் 2024, 5:50 pm

இலங்கை சிறையில் வாடும் மீனவா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா். அவா் சனிக்கிழமை விடுத்த அறிக்கை: காரைக்கால் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 15 மீனவா்களை அவா்களின் படகுகளுடன் இலங்கை கடற்படை கடந்த 14-ஆம் தேதி சிறைபிடித்துள்ளது. இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கை பிரதமா் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் எடுக்கப்படவில்லை. ஆனால், அகஸ்தீஸ்வரத்தில் தோ்தல் பரப்புரை கூட்டத்தில் மீனவா்களை ஏமாற்றும் வகையில் பிரதமா் மோடி பேசியுள்ளாா். தமிழக மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படையின் சட்டவிரோதச் செயலை தடுக்க, இந்திய அரசு, இலங்கை அரசுடன் அரசியல் உறுதியுடன் பேச்சுவாா்த்தை நடத்தி மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், இலங்கை சிறையில் உள்ள மீனவா்களை நாட்டுக்கு திருப்பி அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் இரா.முத்தரசன்.