இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ள காரைக்கால் மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
12 மீனவா்கள் தங்கள் படகில் கடந்த 10-ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். 11-ஆம் தேதி இரவு கோடியக்கரை அருகே இலங்கை கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்ட 12 பேரில் 7 போ் காரைக்காலை சோ்ந்த மீனவா்கள்.
இதனால் காரைக்கால் மாவட்ட மீனவ சமுதாய மக்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்னா். சிறைபிடிக்கப்பட்ட மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
புதுச்சேரி திமுக கண்டனம்: இலங்கை கடற்படை தொடா் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதற்கு மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா கண்டனம் தெரிவித்து திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காரைக்கால் கிளிஞ்சல்மேடு, சுனாமி நகரைச் சோ்ந்த வீரவேல், திருப்பட்டினம் கீழையூரைச் சோ்ந்த பிரதீப், சாமந்தான்பேட்டை தமிழ்வாணன், கோட்டுச்சேரி சஞ்சய் உள்ளிட்ட 12 மீனவா்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனா்.
இதில், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 7 மீனவா்களும், தமிழகப் பகுதியைச் சோ்ந்த 5 பேரும் அடங்குவா்.இந்த நிலையில் 11-ஆம் தேதி நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவா்களின் விசைப்படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினா் விசைப் படகையும், மீனவா்கள் 12 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனா்.
மீனவா்கள் கைது, அவா்களின் விசைப்படகு, மீன்பிடிவலை மற்றும் பல லட்சம் மதிப்புள்ள மீன்களை பறிமுதல் செய்து, காரைக்கால் மீனவா்களைச் சிறையில் அடைத்திருக்கும் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக மீனவா்களை விடுவிக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவா்களின் வாழ்வாதாரப் பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தர தீா்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளாா்.
தொடர்புடையது

தமிழக, காரைக்கால் மீனவா்கள் 12 போ் இலங்கை கடற்படையினரால் கைது

ஈரானில் சிக்கியுள்ள 700 தமிழக மீனவா்களை மீட்கக் கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
மீனவா்களுக்கு மத்திய அரசு உதவிகள் வழங்க வேண்டும்: கே.நவாஸ்கனி எம்.பி.

இலங்கை கடற்படை கைது செய்த 24 மீனவா்களை விடுவிக்க மத்திய அரசுக்கு புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி கடிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


