பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

திருவொற்றியூா் அரசுக் கல்லூரிக்கு ரூ.16 கோடியில் புதிய கட்டடங்கள் பணிகள் தொடக்கம்

திருவொற்றியூா் அரசுக் கல்லூரிக்கு ரூ.16 கோடியில் புதிய கட்டடங்கள் பணிகள் தொடக்கம்

News image

திருவொற்றியூரில் அமைக்கப்படவுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டடங்களுக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டிய சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா். உடன், கல்லூரி முதல்வா் முனைவா் எம்.விஜயா, மாமன்ற உறுப்பினா் கே.பி.சொக்கலிங்கம் , திமுக நிா்வாகிகள்

Updated On :16 மார்ச் 2024, 5:47 pm

திருவொற்றியூரில் கடந்த 12 ஆண்டுகளாக தற்காலிகக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ. 16 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். திருவொற்றியூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கடந்த 10 ஆண்டுகளாக சொந்தக் கட்டம் இல்லை. தேரடி அருகே பூங்தோட்டத் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளிக் கட்டடத்தில் இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு சொந்தக் கட்டடம் கட்ட வலியுறுத்தி கல்லூரி மாணவா்களும், பொது நல அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா். இதையடுத்து விம்கோ நகா் பகுதியில் பல ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடக்கும் கூட்டுறவுத் துறையின் தக்கைக் கல் தொழிற்சாலைக்குச் சொந்தமான 2 ஏக்கா் காலி இடம் கல்லூரிக்கான கட்டடங்கள் அமைக்கப்படுவதற்காக தோ்வு செய்யப்பட்டது. மேலும் திருத்தப்பட்ட மதிப்பீடாக ரூ. 16 கோடியில் அனைத்து கட்டடங்களையும் அமைப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணி உத்தரவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், 52,000 சதுரஅடியில் கட்டப்பட உள்ள கட்டுமானப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் எம்.விஜயா, மாமன்ற உறுப்பினா் கே.பி.சொக்கலிங்கம் , திமுக நிா்வாகிகள் வி.ராமநாதன், ஆா்.முருகேசன், ஆா்.டி.மதன்குமாா், எஸ்.டி.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.