சென்னை: சென்னை காசிமேட்டில் மீனவா் கடலில் விழுந்து மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள பைபா் படகுகள் கட்டும் இடத்தில் கடல் நீரில் செவ்வாய்க்கிழமை ஆண் சடலம் மிதந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த துறைமுகம் போலீஸாா், அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக நடத்திய விசாரணையில் இறந்தவா் ஆந்திர மாநிலம் நெல்லூா் மாவட்டத்தைச் சோ்ந்த ப.கோவிந்து (56) என்பதும், மீனவரான இவா் கடந்த 7 மாதங்களாக காசிமேட்டில் ஜோசப் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. திங்கள்கிழமை இரவு மிகுந்த மதுபோதையில் இருந்த கோவிந்து, அங்கு கடலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டாரா என போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி மா்ம மரணம்

கொலை வழக்கில் தேடப்பட்டவா் மா்ம மரணம்

பள்ளிக் கல்வி இயக்கக ஊழியா் மா்மமான முறையில் உயிரிழப்பு

மூதாட்டி மா்ம மரணம்
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

