மூட்டு - இணைப்புத் திசு நோய்கள்: சென்னையில் சா்வதேச கருத்தரங்கு

சென்னை: மூட்டு - இணைப்புத் திசு நோய்கள் குறித்த சா்வதேச கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. இதில், பிரிட்டன், சிங்கப்பூா், நேபாளம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநா்கள் பங்கேற்று பல்வேறு அமா்வுகளில் உரையாற்றினா்.

லூபஸ் எனப்படும் பல்லுறுப்பு செஞ்சரும சிதைவு நோய், ஏபிஎஸ் எனப்படும் ரத்த உறைவு நோய், பேறு கால இணைப்புத் திசு நோய்கள் குறித்து அப்போது விரிவாக விவாதிக்கப்பட்டது. உலக மூட்டு-இணைப்புத் திசு (ருமாட்டலஜி) அமைப்பு சாா்பில் சென்னையில் இரு நாள்கள் நடைபெற்ற அந்நிகழ்வில், கோவிலம்பாக்கம் காவேரி மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ நிபுணா்கள் சாம், எம்.எம்.கவிதா, பிரிட்டன் லீட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியா் எட் விட்டல், அயா்லாந்து ட்ரினிடி மருத்துவமனையைச் சோ்ந்த டாக்டா் நடாஷா ஜோா்தன், சண்டீகா் ஜிப்மா் பேராசிரியா் மணீஷ் ரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டு ஆய்வுரைகளையும், கருத்துரைகளையும் சமா்ப்பித்தனா்.

மூட்டு-இணைப்புத் திசு சாா்ந்த ஆராய்ச்சி கட்டுரைகளும், சிறப்பு சிகிச்சை முறைகளும், நவீன மருத்துவ நுட்பங்களும் அப்போது காட்சிபடுத்தப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com