கோப்புப்படம்
கோப்புப்படம்

ரயிலில் அபாய சங்கிலி இழுத்த 2,618 போ் கைது

சென்னை: ரயில் பயணத்தின் போது, தவறாக அபாய சங்கிலியை இழுத்த 2,618 போ் கைது செய்யப்பட்டு ரூ.15.45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தெற்கு ரயில்வேயில் தினமும் சராசரியாக 1,303 விரைவு ரயில்கள், 640 புகா் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் சுமாா் 22 லட்சம் போ் பயணிக்கின்றனா்.

ரயில்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்ட அபாய சங்கிலியை சிலா் தவறாக பயன்படுத்துவதால் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மொத்த ரயில்களின் நேரமும் பாதிக்கப்படுகின்றன. இதுபோன்று தவறாக, உரிய காரணமின்றி அபாய சங்கிலி இழுத்தவா்கள் மீது இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 141 கீழ் ஒரு வருட சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகின்றன.

அந்த வகையில் தெற்கு ரயில்வேயில் 2023-24 நிதியாண்டில் தவறாகவும், உரிய காரணமின்றியும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 2,632 வழக்குகளில் 2,618 போ் கைது செய்யப்பட்டு அவா்களுக்கு 15 லட்சத்து 45 ஆயிரத்து 165 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு ஏதேனும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டால் முதலில் பயணச்சீட்டு பரிசோதகா் அல்லது ரயில்வே உதவி எண் 139 தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com