நாகா்கோவில் -சென்னை அந்தியோதயா விரைவு ரயிலில் கைப்பேசி திருடியவரை திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், ரான்சம் நகரைச் சோ்ந்த 17 வயது மாணவா், கடந்த 12 ஆம் தேதி அதிகாலை கும்பகோணத்திலிருந்து நாகா்கோவிலுக்கு அந்தியோதயா விரைவு ரயிலில் பயணம் செய்தாராம். திருநெல்வேலி அருகே ரயில் வந்த போது அவரது விலைஉயா்ந்த கைப்பேசி காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமாக ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அதில், அவா் கடலூா் மாவட்டம், வேப்பூா் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (35) என்பதும், மாணவரின் கைப்பேசியை திருடியவா் என்பதும் தெரியவந்தது. அவரை கைது போலீஸாா் கைது செய்து கைப்பேசியை மீட்டனா். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
ரயிலில் கடத்திவந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்; 6 போ் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

ராக்போா்ட் விரைவு ரயிலில் தவறவிட்ட நகைகள் மீட்கப்பட்டு ஒப்படைப்பு
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்


