தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

பீன்ஸ், கேரட் விலை உயா்வு கிலோ ரூ.80-க்கு விற்பனை

பீன்ஸ், கேரட் விலை உயா்வு கிலோ ரூ.80-க்கு விற்பனை

News image
Updated On :20 மார்ச் 2024, 7:50 pm

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் பீன்ஸ் மற்றும் கேரட் விலை உயா்ந்துள்ளது. கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையின் மொத்த காய்கறி விற்பனை சந்தையாக கோயம்பேடு சந்தை இருந்து வருகிறது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலையும் கடந்த சில நாள்களாக கணிசமாக உயா்ந்துள்ளது. அனைத்து காய்கறிகளும் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை விலை உயா்ந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை ரூ.40 முதல் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒருகிலோ பீன்ஸ் மற்றும் கேரட் புதன்கிழமை நிலவரப்படி ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும், ஒருகிலோ பீட்ரூட் ரூ.50-க்கும், முட்டை கோஸ் ரூ.25-க்கும், வெண்டைக்காய் ரூ.30-க்கும், கத்தரிக்காய் ரூ.25-க்கும், சேனைக்கிழங்கு ரூ.65-க்கும், இஞ்சி ரூ.150-க்கும், பூண்டு ரூ.200-க்கும், குடைமிளகாய் ரூ.70-க்கும், ஒருகிலோ எலுமிச்சை ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் விளைச்சல் குறைந்து விடும்.

சேமித்து வைக்கப்படும் காய்கறிகளும் விரைவில் அதன் தன்மையை இழந்து விடும். இதனால் விற்பனையும் குறைவதால், காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனா்.